Chalkmouse
மெல்லும் வார்த்தை....
சொல்லும் கவிதை......
வங்கியில் போட்டு வைத்த
பணத்தை போல....
வார்த்தைதானே
சேர்த்து வைத்திருந்தவள்.....
ஏடிஎம் மிஷின் துப்பிய நோட்டினை போல ....ஒன்று ....இரண்டாய்.....
பேச்சதனை பேசுகிறாள்.....
சிக்கனத்தைக் கடைபிடித்து....
சீர் பாடவே பேசுபவள்....
இக்கணத்தில் இயல்பு நிலை மாறி...
ஏதேதோ பேச நினைத்து...
ஏதிலியாய் நிற்கின்றாள்....
இதயமதை வருத்திக் கொண்டு....
இமயம் என்று நினைத்துக்கொண்டு.....
ஏங்கி நிற்கின்ற ....
தங்க பெண்ணிற்காக...
தமிழ் படிக்கும்.....
✍ S.P. பாலகுரு
Comments
Post a Comment
Be the real you, whatever happen......