Chalkmouse
கன்னி மனம்
கதிர் நீ....
நிலவு நான்.....
ஆகாயம் நீ .....
அசைந்தாடும் வெண்மேகம் நான்.... இளவேனில் சுடுகனல் நீ .....
மழை வீழும் சிறுஅருவி நான் .....
உதட்டு சிரிப்பு நீ.....
உள்ளத்து அழுகை நான்....
இளம் குமரி கவிதை நீ.....
முதிர்கன்னி வாய் பாட்டு நான்.....
காலத்தின் நேசிப்பு நீ.....
கண்ணீரின் யாசிப்பு நான் .....
கண்டடையும் நாழிகை.
கண்களில் கேளிக்கை.
மாய வரம் தரும் ......
மாயவரம் குழலிசையின்...
மன மோகன ராக கவிதை நீ .....
சித்திரை இரவினிலே ....
கோடை தரும் அயர்வினிலே..... கசகசவென்ற பொழுதினிலே....
அரும்பி நிற்கும் வியர்வை நான்....
மாபெரும் மன்னன் சிம்மாசனத்தில் நீ..
சுழன்றாடும்காலத்தின் தொட்டிலில்
நான் ......
இமை மூடா இரவில் வெளிச்சம் நீ.....
கண் கூசும் பகலின் பருக்கை நான்.....
காதலித்தது ஏதும் அறியாமல் ....
கண்ணீரின் கரிப்போடு..
துயிலாத மனதோடு....
அன்றலர்ந்த நெஞ்சோடு.... அன்பிற்கினிய கண்ணாளா...
காத்திருக்கிறேன் உன் நினைவோடு...
கடைத்தேறா விழி நீரோடு.....
காலமெல்லாம் உன்னை எண்ணி.... கண்ணீரின் துளியை எண்ணி ....
எண்ணி.....எண்ணி.....
என்ன செய்வாள் இந்த கன்னி.,....
கன்னியமனதோடு....
காத்திருக்கும் கன்னிக்காக....
கவிதை வடிக்கும்....கண்ணீர் சுரக்கும்.....
S.P. பாலகுரு.....
Comments
Post a Comment
Be the real you, whatever happen......