என் பூந்தென்றலே.......

சொல்லிவிடடி என் சுகந்தமே.....
என்று வருவாய் வசந்தமாக.....
பனிப்பாறை மோதிய படகாய் .......
இலக்கு தொலைத்த விண்கலமாய்.......
இங்கு நான் சிதறி கிடக்கின்றேன்.........
சொல்லிவிடடி என் வசந்தமே.........

என் வாழ்வெனும் தீபத்தை .......
உன் காலடியில்
சமர்ப்பிக்கிறேன் ......
சூறைக் காற்றாய் சீரழித்தலும்...... தென்றலாய் பாதுகாத்தலும் .......
உன் பொறுப்பே .......!!!!!!

உன் உள்ளங்கை
மெது மெதுப்பை......
உன் மனம் கொண்டுள்ளதா .......
அன்றி உன் கார்கூந்தல்
கடினம் போலும் ........
மனம் மாறி விட்டதா .......???
இதயம் திறந்து சொல்லிவிடடி ......
என் பூந்தென்றலே.......
புதுப் பைந்தமிழ் மன்றமே.......???!!!!!!

S.P. பாலகுரு

Comments